Take a fresh look at your lifestyle.

‘வாடிவாசல்’ தந்த சி.சு. செல்லப்பா!

பேசும் படம்:

‘எழுத்து’ சி.சு.செல்லப்பா என்றால் சிறுபத்திரிகை வட்டாரத்தைத் தெரிந்தவர்களுக்கு  நன்கு பரிச்சயமாகி இருக்கும். நாவல், விமர்சனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் தான் ‘வாடிவாசல்’.

அந்த ‘வாடிவாசல்’ தான் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

‘எழுத்து’ பத்திரிகையை சிரமப்பட்டு நடத்தியபோதெல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் பணமும், அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் கிடைத்திருக்கிறது என்பது காலத்தின் விசித்திரம்.

வாடிவாசலை எழுதியவர் சி.சு.செல்லப்பா என்றாலும், திரையில் அதற்கு உயிர் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

குறிப்பு: படத்தில் குடும்பத்துடன் சி.சு.செல்லப்பா.