Take a fresh look at your lifestyle.

சங்கரதாஸ் சுவாமிகள் விருதைப் பெறும் ‘காதல் – தி கோர்’!

கடந்த ஆண்டு (2023) ஜியோ பேபி இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காதல் தி கோர்’. 

உலகளவில் வெளியான இத்திரைப்படம், வசூலிலும் சாதனை படைத்து, விமர்சன ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, இப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை மலையாளத் திரைப்படம் ‘காதல் தி கோர்’ பெறுகிறது.

இப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கௌரவிக்கிறார்.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்தியத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.