கடந்த 14-ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா-45’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதில் நாயகியாக த்ரிஷா நடிக்க தேர்வாகி உள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் 19 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் துவங்க உள்ளது. இதற்காக படக்குழுவினர் மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் நாளை முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
