Take a fresh look at your lifestyle.

எனது பயணமும் பாதையும் இன்னும் நீளும்…!

நடிகை சமந்தா நெகிழ்ச்சி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

சமந்தா நடித்த ‘பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்தத் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.

இதையடுத்து ‘தும்பத்’ என்ற இன்னொரு வெப் தொடரிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஆதித்யா ராய் கபூர், வாமிகா கபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமந்தா அளித்த நேர்காணல் ஒன்றில் “நான் இப்போது சராசரி நடிகைதான். இன்னும் நடிப்பில் முதிர்ச்சியைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன்.

எனது சினிமாப் பயணத்தில் எத்தனையோ வெற்றிகளைச் சந்தித்து இருந்தாலும் அவை அனைத்துக்கும் கூட்டு முயற்சிதான் காரணம்.

ஒரு படத்திற்கு பின்னால் அனைவரின் உழைப்பும் திறமையான குழுவினர் இருந்தால்தான் நமது திறமை வெளியே வரும்.

நான் திறமையான படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்” என சமந்தா தெரிவித்துள்ளார்.