வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிக்ரா’. நேற்று இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திரிவிக்ரம், ராணா டகுபதி மற்றும் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆலியா பட், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார் சமந்தா. அதைக் குறித்து புகழ்ந்துள்ளார். மேலும் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சமந்தா ஒரு ஹீரோ என்று பேசியுள்ளார் ஆலியா பட்.
இதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் திரிவிக்ரம், சினிமா உலகில் ரஜினிக்குப் பிறகு அனைத்து மொழிப் படங்களிலும் புகழ்ப் பெற்றவர் சமந்தா மட்டும் தான் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.