Take a fresh look at your lifestyle.

அன்றைய விருது வழங்கும் விழாவில் வைஜயந்தி மாலா!

1950 மற்றும் 1960களில் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளில் வைஜயந்தி மாலாவும் ஒருவர்.

கர்நாடக இசைக் கலைஞர், பரதம், பாடல், நடிப்பு என பன்முகத் திறமை கொண்டவர் வைஜயந்திமாலா. அதனாலேயே, அந்தக் காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் 16 வயதிலேயே 1949-ல் தமிழில் வெளிவந்த வாழ்க்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்போதைய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்த வைஜயந்திமாலா, சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வைஜயந்திமாலாவுக்கு 1959-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இவருடன் சேர்ந்து 1958-ம் ஆண்டு ராஜ் கோஷ்லா இயக்கத்தில் வெளிவந்த ‘காலா பாணி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருது வாங்கியவர் நடிகர் தேவ் ஆனந்த்.