Take a fresh look at your lifestyle.

யூடியூபில் 100 மில்லியன்களைக் கடந்த “வாட்டர் பாக்கெட்” பாடல்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இந்தியிலும் சில படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக மாறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ப.பாண்டி’ படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் ‘ராயன்’. இதில் அவரே நாயகனாக நடித்திந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தனுஷின் 50-வது படமாக உருவாகி இருந்த ‘ராயன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதைக் களத்தில் உருவாகி இருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்த்த இந்தப் படம் உலகளவில் ரூ.160 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.

தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை, ஜகமே தந்திரம், கேப்டன் மில்லர் போன்ற கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான படங்களிலேயே இந்தப் படம் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையார்களைக் கடந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களில் 10 கோடிப் பார்வைகளைக் கடந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

இதற்கு முன்பு ஏஆர் ரஹ்மான் பாடல்களான “ஆளப் போறான் தமிழன், வெறித்தனம், மல்லிப்பூ வச்சி வச்சி, சிங்கப் பெண்ணே” ஆகிய பாடல்கள் 100 கோடிப் பார்வையார்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.