Take a fresh look at your lifestyle.

ஓடிடியில் வெளியாகிறது ‘டெட்பூல் & வோல்வரின்’!

ஹாலிவுட்டில் மிகப் பெரிய வசூல் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் சேர்ந்துள்ளது. அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல் வசூலும் குவித்துள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் ஷான் லெவி இயக்கத்தில் ஹியூ ஜேக்மேன், ரையான் ரெனால்ட்ஸ் நடிப்பில் வெளிவந்த படம் ‘டெட்பூல் & வோல்வரின்’.

மார்வெல் ஸ்டூடியோவின் 45-வது படம் ‘டெட்பூல் & வோல்வரின்’. மார்வெல் நிறுவன சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், தோர், ஹல்க் டெல்பூல் உள்ளிட்ட படங்கள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

டெல்பூல் – 1, டெல்பூல் – 2 பாகத்தின் தொடர்ச்சி தான் டெட்பூல் & வோல்வரின் திரைப்படம். சுமார் 2000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் தற்போது உலகளவில்  8000 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் வெளியானது. இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களின் அதிக வசூல் பெற்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருந்த இத்திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஏற்கனவே மார்வெல் ஸ்டூடியோஸின் படங்கள் இருக்கும் பட்சத்தில் தற்போது டெட்பூல் வோல்வரின் படமும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. 

இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சிக்காக இத்திரைப்படத்தை மார்வெல் ஸ்டூடியோஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.