Take a fresh look at your lifestyle.

நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகிறது ‘கோட்’!

செப்டம்பர் 5-ம் தேதி, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‘தி கோட்’ வசூலிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்த இந்தப் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

சமீபத்தில் நீளம் கருதி இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்டோபர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கோட்’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.