‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் வெளிவந்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நானி, இவருடன் எஸ்.ஜே.சூர்யா. பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது.
இந்நிலையில், இந்தப் படம் தற்போது ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நானி, ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் ‘ஹிட் 3’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.