97-வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் போட்டியிட துருக்கி சார்பில் செகி டெமிர்குபஸ் (Zeki Demirkubuz) இயக்கிய ‘லைப் 2023 ஹயாத்’ (Life 2023 Hayat) என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
இயக்குநருக்கு இது 12-வது திரைப்படம். ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் போட்டியிட இவருடைய படம் அனுப்படுவது இதுவே முதல் முறை.
சமீபத்தில் இந்தத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து.
ஹிக்ரான் என்ற பெண் திடீரென ஒருநாள் வீட்டை விட்டு காணாமல் போகிறாள். அவரது தந்தையால் விருப்பமற்ற நிச்சயதார்த்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில், வீட்டை விட்டு ஓடுகிறாள். எங்கு சென்றால் என தெரியவில்லை.
திருமண நிச்சயம் செய்ய இருந்த ரெசா அனுப்பி வைத்த பரிசுப் பொருட்களை அவளின் தந்தை ரெசாவின் தாத்தாவிடம் ஒப்படைத்து விடுகிறார். அவள் எங்கேயோ போய்விட்டாள் இனி வந்தாலும் அவளைக் கொன்று விடுவேன் என அவளின் தந்தை சொல்கிறார்.
ஹிக்ரானுக்கு தன்னைப் பிடிக்கவில்லை போல என தினமும் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறார் ரெசா.
இந்தச் சூழ்நிலை அவரை வெகுவாக பாதிக்கிறது. நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என மனது உறுத்திக்கொண்டே இருக்க, நண்பர்களின் மூலம் இஸ்தான்புல் சென்று அங்கே அவளைத் தேடுகிறார்.
பிறகு அவளைக் காணவில்லை என்ற போஸ்டரை ஓட்டுகிறார். விபச்சாரக் கூட்டத்திடம் அவள் இருக்கிறாள் என்ற தகவல் கிடைக்கிறது.
பின்பு ஒரு துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். முடிவில் அவளைக் கண்டுபிடித்தானா? என்ன ஆனது? எதற்கு துப்பாக்கி? என்பதே மீதி படம்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் நாவல் படிப்பது போன்ற உணர்வை தரக்கூடியது.
சில வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு விருதுகளை வென்றுள்ளது. நாயகன், நாயகி இருவருக்கும் முதல் திரைப்படம். இதற்கு முன்பு சிறு வயதுப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருக்கி சார்பாக 30 திரைப்படங்களை ஆஸ்காருக்கு வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் அனுப்பியுள்ளனர்.
குறிப்பாக நூரிபில்ஜ் செலான் (Nuri Bilge Ceylan) என்றாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். இவரின் 6 திரைப்படங்கள் இந்தப் பிரிவில் கலந்துகொண்டுள்ளன. ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே ஷார்ட்லிஸ்ட் பட்டியல் வரை வந்துள்ளார்.
நாமினேஷனோ, வெற்றியோ பெறவில்லை. ஆனால், இவரின் திரைப்படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
அதற்கு அடுத்தபடியாக செமி கப்லாநோக்லு (Semih Kaplanoğlu) மூன்று படங்கள் அனுப்பியுள்ளனர். துருக்கி படங்கள் நன்றாக இருக்கும். தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் பாருங்கள்.
– நன்றி: முகநூல் பதிவு