Take a fresh look at your lifestyle.

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர் மகளான அதிதி ஷங்கர், கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது திறமையைக் காட்டினார் அதிதி ஷங்கர்.

அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை விஜய் கனகமெடலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.