Take a fresh look at your lifestyle.

அர்ஜூன் தாசின் ‘பாம்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இதற்கான விழா, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது: பாம் ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும். ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது: இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனே பிடித்தது, உடனே ஒப்புக்கொண்டேன். விஷால் இன்னும் நல்ல படங்கள் செய்வார், பெரிய இடத்திற்குச் செல்வார். அர்ஜுன் தாஸ் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துகள்.

ஷ்வாத்மிகா உங்கள் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி வருகிறீர்கள், வாழ்த்துகள்.  

இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்னச் சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார்.

படம் மிக நல்ல படமாக வந்துள்ளது. மேஜிக்கல் எண்டர்டெயினராக இருக்கும். தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள், அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது: பாம் மிக ஸ்பெஷலான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார் இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.