2014-ம் ஆண்டு கரேத் எட்வர்ட் இயக்கத்தில் வெளிவந்த ‘காட்ஜில்லா’ திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விமர்சனங்கள் மத்தியிலும் வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதைத் தொடர்ந்து கரேத் எட்வர்ட் ‘ராக் ஆன்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கும் அடுத்த படம் ‘ஜூராசிக் வேர்ல்டு 4-ம் பாகம். இந்தப் படத்துக்கு உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு கிளப்பி உள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 2-ம் தேதி உலகளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் கோப் திரைக்கதை எழுத உள்ளார். இதில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ் சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் டையரா பிரம் டெட்ராய்ட், பிஎம்எப், பிளாக் சம்மர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான பெச்சிர் சில்வைனும் படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் கரேத் எட்வர்ட்.
இந்நிலையில் ஜூராசிக் வேர்ல்டு நான்காம் பாகத்துக்கு ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது படக்குழு.
இத்துடன் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் ஆகியோரின் முதல் தோற்றங்களையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ஜூராசிக்_வேர்ல்டு_4_ம்_பாகம் #Jurassic_World_4_Part #ஜோனதன்_பெய்லி #Jonathan_bailey #ஸ்கார்லெட்_ஜொஹான்ஸ்சன் #Scarlett_Johansson #இயக்குநர்_கரேத்_எட்வர்ட் #Director_Gareth_Edwards #ஜுராசிக்_வேர்ல்ட்_ரீபெர்த் #Jurassic_world_Rebirth