Take a fresh look at your lifestyle.

மீண்டும் வில்லியாக நடிக்கும் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், லியோ ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

தற்போது அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. தெலுங்கிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா, தமிழில் கமல்ஹாசனுடன் தக்லைப் மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படமொன்றில் பிரபாஸ் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை அனிமல் என்ற இந்திப் படத்தை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஸ்பிரிட் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நாயகன், வில்லன் என்று இரண்டு வேடங்களில் பிரபாஸ் வருகிறார். நாயகிகளாகவும் இரண்டு பேர் நடிக்கின்றனர். வில்லன் பிரபாசுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும், த்ரிஷாவும் வில்லியாகவே நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுசின் ‘கொடி’ படத்தில் வில்லத்தனமான அரசியல்வாதியாக த்ரிஷா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.