Take a fresh look at your lifestyle.

சிறந்த நடிகை, நடிகர் விருதை வென்ற ஊர்வசி, பிருத்விராஜ்!

கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு நடைபெறும் 54-வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதில், 84 படங்கள் புதுமுக இயக்குநர்களால் உருவானவை.

திருவனந்தபுரத்தில் கேரளத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இந்தாண்டுக்கான கேரளத்தின் மாநில விருதுகளை அறிவித்துள்ளார்.

இதில் சிறந்த நடிகருக்கான விருது ஆடுஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜீக்கும் சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு என்ற படத்தில் நடித்த ஊர்வசிக்கும் கிடைத்துள்ளது.

மம்முட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும் ஆடுஜீவிதம் படத்தை இயக்கிய பிளெஸ்ஸிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் கிடைத்திருக்கிறது. மேலும் 7 விருதுகளை ஆடுஜீவிதம் படம் வென்றுள்ளது.