பிரபல மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது கமலின் ‘தக் லைஃப்’ படத்திலும் இவர் நடித்து வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் மலையாள படம் ‘பனி’.
கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்தத் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.
நாயகனாக ஜோஜு ஜார்ஜ்ஜும் இவருக்கு மனைவியாக ‘நாடோடிகள்’ அபிநயாயும் நடித்துள்ளார். சாகர் சூர்யா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘பனி’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.