Take a fresh look at your lifestyle.

மீண்டும் வைரலாகும் தமன்னாவின் நடனம்!

இந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ‘கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எழுபத்தைந்து படங்களுக்கு மேல் நடித்துள்ள தமன்னா, கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமன்னா சினிமாவில் கால் பதித்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அறிமுகமான சில ஆண்டுகளில் அடைந்த பிரபலத்தைவிட இப்போது ஒருபடி மேலான புகழுடனும் மார்க்கெட்டுடனும் இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தமன்னாவின் முகம் நன்றாகத் தெரியத் தொடங்கிவிட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ்-2, ஜீ கர்த்தா போன்ற இணையத் தொடர்களில் தமன்னாவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் “காவாலா” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் மிகப்பெரிய ஹிட் ஆகியது.

இந்த நிலையில், ஸ்ட்ரீ – 2 (stree – 2) என்கிற இந்திப் படத்தில் ஆஜ் கி ராத் (Aaj Ki Raat) என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் காவாலா நடனத்தை நினைவுபடுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.