Take a fresh look at your lifestyle.

டைட்டானிக் மாதிரியான காதல் காவியத்தில் நடிக்க ஆசை!

- நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ்,  பேபி ஜான் படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். தற்போது, ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள ஒரு நேர்க்காணலில், “எனக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் விருப்பமான படம் டைட்டானிக். நான் எத்தனையோ முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்.

டைட்டானிக் அற்புதமான ஒரு காதல் காவியம். அதில் ஹீரோ, ஹீரோயின் கப்பலின் விளிம்புக்கு வந்து நின்றுக் கொண்டு கைகளை விரித்து நிற்கும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் புதுமையாகவே இருக்கும்.

சிறு வயதில் அந்த சினிமாவைப் பார்த்து எமோஷன் ஆன சந்தர்ப்பங்கள் எத்தனையோ இருக்கின்றன. சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றபோது நான் அந்த ஹீரோ, ஹீரோயின்கள் மாதிரி ஒரு கார் முன் கைகளை விரித்து நின்றுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

டைட்டானிக் மாதிரியான அற்புதமான படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வாய்ப்பு வருமோ வராதோ. ஆனால் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் என்னைவிட அதிர்ஷ்டசாலி இருக்க முடியாது” என்றார்.

– நன்றி: தினந்தந்தி