Take a fresh look at your lifestyle.

தீபாவளிப் பாய்ச்சலுக்குத் தயாரான ‘அமரன்’!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக அமரன் படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த, வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையைக் கொண்டு அமரன் படம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அமரன் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அமரன் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#மேஜர்_முகுந்த்_வரதராஜன் #Major_Mukund_Varadarajan #சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan #அமரன் #Amaran #ராஜ்கமல்_பிலிம்ஸ் #Rajkamal_Films #ராஜ்குமார்_பெரியசாமி #Rajkumar_Periyasamy #சாய்_பல்லவி #Sai_Pallavai #ஜிவி_பிரகாஷ்குமார் #GV_Prakashkumar