Take a fresh look at your lifestyle.

‘வேட்டையன்’ பட டப்பிங் பணிகளைத் துவக்கிய ஃபஹத்!

ரஜினிகாந்த், ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ், ஷாஜி சென் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘வேட்டையன்’ படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘வேட்டையன்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் பத்தாம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நடிகர் பஹத் பாசில் ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங்கை பேச துவங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழில் அவர் நடித்த விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகியப் படங்களிலும் தானே சொந்த குரலில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.