திரைப்பட நடிகைகள் எல்லாம் பொதுவாக சொகுசு கார்களின் மீது ஆர்வம் கொண்டவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
அப்படிப்பட்ட நடிகைகளை நம்மால் விரல் விட்டு எண்ணி விட முடியும். இதில், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் மஞ்சு வாரியர் குறிப்பிடத்தக்கவர். தமிழில் தனுசுடன் அசுரன், அஜித்துடன் வலிமை உள்ளிட்ட படங்களில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் (BMW R1250 GS) பைக் ஒன்றை வாங்கியுள்ளார் மஞ்சு வாரியர். அட்வென்ஜர் டூரர் ரகத்தைச் சேர்ந்த இந்த பைக்கின் விலை சுமார் 23 லட்ச ரூபாய்.
மஞ்சு வாரியர் இந்த பைக்கை வாங்குவதற்கு நடிகர் அஜித் குமார்தான் மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கில், நடிகை மஞ்சு வாரியர் அவ்வப்போது சாகச பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில் சமீபத்திலும் அவர் ஆஃப் ரோடு சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன.


