Take a fresh look at your lifestyle.

விஜய்யின் கடைசி படத்தில் ஜோடி சேரும் சமந்தா!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து விஜய் கடைசியாக நடிக்க இருக்கும் அவரது 69-வது படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தப் படம் கைவிடப்படலாம் என்று ஏற்கனவே பரவிய தகவலை விஜய்க்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

இந்தப் படத்தை இயக்க ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை டைரக்டு செய்து பிரபலமான எச். வினோத் பெயர் அடிபடுகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யுடன் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தெறி, மெர்சல், கத்தி படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து இருக்கிறார். தற்போது மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் தகவல் விஜய் மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.