‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும், தங்கள் படங்களின் புதிய ‘கெட்டப்’பில் காட்சி அளிக்கும் போட்டோக்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பும், கமலின் ‘இந்தியன்-2′ படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே ஸ்டூடியோவில் நடந்தது.
அப்போது இருவரும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த இரு படங்களையும் ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கிறது.
இரு உச்ச நட்சத்திரங்களும் சந்தித்து கொண்டபோது, ‘லைகா’ நிறுவன நிர்வாக தயாரிப்பாளர் தமிழ் குமரன் உடன் இருந்தார். அப்போது இருவரும் சந்தித்து கொண்ட போட்டோக்கள் வெளியிடப்படவில்லை.
இரு தினங்களுக்கு முன்னர் அந்த;g புகைப்படங்களை ‘லைகா’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் போட்டோவில் அடையாளம் தெரியாத வகையில் கமல் காணப்படுகிறார்.
கமல் நடிக்க ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது.
அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ வரும் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மூன்றாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேட்டையன்’ அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கமல், மணி ரத்னம் இயக்கும் ‘தக்லைஃப்’ படத்தில் ‘பிஸி’யாக இருக்கிறார். ரஜினி, லோகேஷ் கனகாராஜ் இயக்கும் ‘கூலி’ படத்துக்கு தயாராகி வருகிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.