1996-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்தும் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்.