Take a fresh look at your lifestyle.

இணையதளவாசிகளால் விமர்சிக்கப்படும் ரகுல் ப்ரீத் சிங்!

உலக யோகா தினத்தையொட்டி சமீபத்தில் திருமணமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் சேர்ந்து யோகா செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உலக யோகா தினத்தையொட்டி பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் இணைந்து செய்த யோகா குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதில் ரகுல் ப்ரீத் சிங் மீது அவரது கணவர் படுத்துக் கொண்டு செய்யும் யோகாவும் உள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

– தேஜேஷ்