Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயனுடன் இணைந்த விக்ராந்த்!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சஞ்சய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் பல படங்களில் ஹீரோவாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்த நிலையில், இந்தப் படத்தில் அவர் முக்கியக் கேரக்டரில் நடிக்க உள்ளார்.

அனிருத் இசையில், சுதீப் மேனன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

– தேஜேஷ்.