தனுஷ் நடித்து இயக்கும் ராயன் திரைப்படம் இம்மாதம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 26ஂம் தேதி வெளியிடப்படும் என தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிப்புக்கு பெயர் பெற்ற தனுஷ், ‘பா பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது மீண்டும் ‘ராயன்’ படத்திற்காக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இது நடிகராக அவருக்கு 50வது படமாகும். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘ராயன்’ முதலில் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தனுஷ் தனது பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதிக்கு முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புடன் காளி தெய்வத்தின் அற்புதமான படத்துடன் தனுஷ் இடம்பெறும் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தொகுப்பு பிரசன்னா ஜிகே. இசை ஏஆர் ரஹ்மான். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
– தேஜேஷ்