தனுஷ் நடித்த ‘திருடா திருடி’, ‘சீடன்’, ஜீவா நடித்த ‘பொறி’, இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமான ‘யோகி’ ஆகிய மாறுபட்ட படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா, பிறகு சமுத்திரக்கனி, யோகி பாபு நடித்த ‘வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கினார்.
அதைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வடசென்னை, அசுரன், உள்ளிட்ட படங்களிலும் ரைட்டர், மாருதிநகர் போலீஸ் ஸ்டேசன், அநீதி, வித்தைக்காரன், உயிர் தமிழுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தற்போதுவரை நிறையப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே 2022-ல்’உலோகம்’ என்ற படத்தை எழுதி இயக்கினார். அதில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஜெயமோகனின் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஜெயமோகனே வசனத்தையும் எழுதியுள்ளார்.
தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்ற முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றி வரும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.