4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்த் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள். நேற்று (ஜூன் – 2) இசைஞானி இளையராஜாவிற்கு 81ஆவது பிறந்தநாள்.
அவரது பிறந்த நாளையொட்டி தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் அழகியப் புகைப்படமும் பரிசாகக் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. முகம் மலர பரிசை ஏற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா.


