Take a fresh look at your lifestyle.

ஜூன் 7-ல் மீண்டும் திரைக்கு வரும் ‘இந்தியன்’!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனிடையே 1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மறு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ள ஸ்ரீ சூர்யா மூவிஸ், ஜூன் 7 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் படம் மீண்டும் திரைக்கு வரும் என்று ட்வீட் செய்துள்ளது.

இந்தியன் படத்தில் கமல்ஹாசன், சுதந்திரப் போராட்ட வீரராக மாறிய சேனாபதியாகவும், ஊழல்வாதியாக அவரது மகன் சந்துருவாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

– தேஜேஷ்