Take a fresh look at your lifestyle.

வரவேற்பைப் பெற்ற ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அஜித்குமார் தனது புதிய படமான ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கிய நிலையில் அஜித் குமாரின் அல்ட்ரா-ஸ்டைலிஷ் அவதார் இடம்பெறும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதன் மூலம் படத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடுவிரல் போஸ் மற்றும் ஆயுதங்களுடன் மூன்று அஜித் குமார்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்தில் அஜீத்குமார் சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் தோற்றத்திற்கு திரும்பியுள்ளார்.

போஸ்டரில் அச்சிடப்பட்ட சட்டைகள் மற்றும் பச்சை குத்தல்கள் அவர் ஒரு மாஃபியா அரசனாக நடிக்கக்கூடும் என்று கூறுகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

‘குட் பேட் அக்லி’ 2025 பொங்கல் அன்று இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டி எடிட்டிங். சண்டைக்காட்சிகள் சுப்ரீம் சுந்தர்.

– தேஜேஷ்