Take a fresh look at your lifestyle.

வெளியீட்டுக்குத் தயாரான ‘அரண்மனை 4’!

சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு பல மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ‘அரண்மனை 4’ படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைதளத்தில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை குஷ்பு ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று கூறியிருந்தாலும் அனேகமாக ஏப்ரல் 11 ஆம் தேதியான தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்தப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பே ‘அரண்மனை 4 ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்