கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தக் லைஃப்’.
36 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல் – மணிரத்னம் இணையும் இந்தப் படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அண்மையில் தொடங்கியது. கமல்ஹாசன், ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சைபீரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது.
அந்த நாடுகளில் கமலஹாசனுடன் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இதனிடையே, கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு இரண்டு வாரங்கள் ஷுட்டிங் நடக்கிறது.
– பாப்பாங்குளம் பாரதி.