’மாஸ்டர்’ வெற்றிப் படத்தை அடுத்து நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லியோ’
விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிடோரும் நடித்துள்ளார்கள்.
வரும் 19 ஆம் தேதி லியோ ரிலீஸ் ஆகிறது. அண்மையில் தணிக்கைக்குச் சென்ற இந்தப் படத்தில் 13 இடங்களில் சென்சார் கட் கொடுத்துள்ளது.
விஜய் ஆபாச வசனம் பேசும் இடத்தில் ‘பீப்’ ஒலி இடம்பெற வேண்டும் – கெட்ட வார்த்தைகள் இடம்பெறும் காட்சிகளிலும் ‘பீப்’ ஒலியை வைக்க வேண்டும். ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை நீக்க வேண்டும் என் சென்சார் கண்டிப்புடன் கூறிவிட்டது.
சிகரெட் கம்பெனிகள் பெயர் இடம்பெறக்கூடாது – சஞ்சய் தத் வரும் சில கோரமான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கறார் காட்டியுள்ளது சென்சார் போர்டு.
சென்சார் அறிவுறுத்திய 13 காட்சிகளையும் படக்குழு ஏற்று படத்தில் திருத்தம் செய்து விட்டது.

லியோவால் இன்னொரு சிக்கலும் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில், விஜய் பேசும் ஆபாச வசனம் பெரும் கண்டனத்துக்கு ஆளானது. அந்த டிரைலர் சென்சார் செய்யப்படவில்லை.
அந்த டிரைலரை தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட்டனர்.
‘சென்சார் செய்யாத டிரைலரை ஏன் வெளியிட்டீர்கள்?’ என கேட்டு அந்த திரையரங்குகளுக்கு தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், லியோவால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், விஜய்க்கும் மோதல் என ஒருவர், சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டார் அந்த பதிவை விக்னேஷ் சிவன் லைக்ஸ் செய்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள், விக்னேஷ் சிவனை விமர்சித்தும், திட்டியும் பதிவுகள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இதனால் மிரண்டு போன விக்னேஷ் சிவன், விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி உள்ள நீண்ட விளக்கம்.
‘விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே குழப்பத்துக்கு மன்னிக்கவும். வீடியோவில் என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதை பார்க்காமலேயே அது லோகேஷ் கனகராஜின் நேர்காணல் என்பதால் அந்த வீடியோவை லைக் செய்தேன். ஏனெனில், நான் லோகேஷ் படங்களின் மிகப்பெரிய ரசிகன்.
அதேபோல், அவரது நேர்காணல்களும், அவர் பேசும் விதமும் எனக்குப் பிடிக்கும். உணர்ச்சிவசப்பட்டு அந்த நேர்காணலில் இருந்த லோகேஷ் கனகராஜின் படத்தைப் பார்த்து லைக் செய்துவிட்டேன். அது என்னுடைய மோசமான தருணம்.
வீடியோவில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதை பார்க்கவில்லை. ட்விட்டரில் இருந்த கருத்தையும் படிக்கவில்லை. நான் கொஞ்சம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.
என்னுடைய தரப்பில் நடந்த சில்லியான தவறு. உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அக்டோபர் 19-ஆம் தேதி படத்தைக் காண நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
என்னுடைய இந்த தவறைப் பொருட்படுத்தாமல் இதற்கு மேலும் இதில் கருத்து தெரிவிக்க நேரத்தை செலவிட வேண்டாம். ‘லியோ’வை கொண்டாட தொடங்குவோம்’ என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
பட விநியோகம் தொடர்பாக, லியோவுக்கு சில சிக்கல்கள் உள்ள நிலையில், படம் வெளிவருவதற்கு முன்பு, இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப்போகிறதோ?
– பாப்பாங்குளம் பாரதி.