‘ஈட்டி’ திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கும் புதிய படம் ‘மகுடம்’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதனை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவாகும் 99-வது படம் ‘மகுடம்’.
இதற்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
படப்பிடிப்பின் போது டைரக்டர் ரவி அரசுவுக்கும், விஷாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், எஞ்சி இருக்கும் காட்சிகளை விஷால் இயக்குவார் என்றும் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாக செய்திகள் பரவின.
இதனை விஷால் மறுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “ரவி அரசுவுக்கும், எனக்கும் எந்த தகராறும் இல்லை – சென்னையில் பிரமாண்ட சண்டைக் காட்சியை படமாக்க அரங்கம் அமைத்துள்ளோம்.
என் பிரியத்துக்குரிய டி.ராஜேந்தர் சார் இந்த செட்டுக்கு அண்மையில் வந்தார். அரங்கைப் பாராட்டினார்
ரவி அரசுதான் படத்தை இயக்கி வருகிறார்” என தெரிவித்துள்ள விஷால், படப்பிடிப்பு அரங்கத்தில் டி.ஆர்., ரவி அரசுவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.