Take a fresh look at your lifestyle.

5 இயக்குநர்கள், 5 கதைகளைப் பேசும் படம்!

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களைப் பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

ராஜு ஷெரேகர் தயாரிப்பில், ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், “காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.

அதை மையமாகக் கொண்டுதான் ‘Vowels’ என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் 7 பாடல்கள் உள்ளன. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

இயக்குநர் சங்கீத், “பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படம் சிறப்பாக வந்துள்ளது.”

நடிகர் ராஜ் அய்யப்பா, “மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் சின்னி ஜெயந்த், “இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள்.

நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தில் யூகி சேது நடித்திருப்பது பெரிய பலம். அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்”.

நடிகர் யூகி சேது, “இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக் கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம்.

சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன்.”

விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, “இன்றைய ஜென்ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு.

அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த், யூகி சேது இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம்.” என்றார்.