Take a fresh look at your lifestyle.

“தெறிக்குது” – ‘கோட்’ படம் பார்த்த விஜய் புகழாரம்!

‘மாஸ்’ டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சினேகா நடித்துள்ளனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி, யோகிபாபு, வைபவ், லைலா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மூன்றாவது பாடலும் ரெடி. இதனை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.

‘டீ- ஏஜிங்’ தொழில் நுட்பத்தில் விஜயை, இந்தப் படத்தில் மிக இளைமையாகக் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு.

‘டைம் டிராவல்’ கதையான இந்தப் படம், செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோட்’ படத்தின் முதல் பாதி தயாராகி விட்டது. இந்த முதல் பாதியை நடிகர் விஜய் அண்மையில் பார்த்துள்ளார்.

படம் பார்த்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்ட விஜய், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ‘படம் தெறிக்குது’ எனப் பாராட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி வைரலாக பரவி, படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.