பிரபல பாலிவுட் டைரக்டர் விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள படம், ‘ஓ ரோமியோ’. ஷாகித் கபூர், திருப்தி டிம்ரி பிரதான வேடங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தில் தமன்னாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
காதலர் தினத்தையொட்டி, இந்தப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படத்தை விளம்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஷால், நடிகை தமன்னாவை ரொம்பவே புகழ்ந்தார்.
அவர் கூறியது : “ஓ ரோமியோ’ படத்தில் தமன்னாவும், விக்ராந்த் மாஸ்சியும் எனக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளனர்- தமன்னா 12 நாட்கள் இந்தப் படத்துக்கு கால்ஷீட் தந்திருந்தார்- அது மட்டுமில்லாமல் படப்பிடிப்புக்கு முன்னதாக நடந்த ஒத்திகையிலும் அவர் பங்கேற்றார். தமன்னாவுக்கு பெரிய மனசு” என்று பாராட்டினார்.
இதனிடையே சர்ச்சை ஒன்றிலும் தமன்னா சிக்கி உள்ளார்.
கர்நாடக அரசு சார்பில் தயாரிக்கப்படும் மைசூரு சாண்டல் சோப்பு மீண்டும் புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
108 ஆண்டுகள் பழமையான இந்த சோப்பின் புதிய விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ.6.2 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
இது கர்நாடகாவில் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நம்ம ஊரில் ராஷ்மிகா மந்தனா, ருக்மினி வசந்த், உள்ளிட்ட நடிகைகள் இருக்கும்போது, மும்பையைச் சேர்ந்த தமன்னாவை ஏன் விளம்பர தூதராக நியமிக்க வேண்டும்” என அங்குள்ள கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
- பாப்பாங்குளம் பாரதி.