Take a fresh look at your lifestyle.

சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீலீலா!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையும், அசுர வேக ஆட்டக்காரருமானவர் ஸ்ரீலீலா. 24 வயதாகும் இவர் ‘புஷ்பா-2’ படத்தில் போட்ட குத்தாட்டம் இந்திய அளவில் இவரை கவனிக்க செய்தது.

தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஸ்ரீலீலா, தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பான் இந்தியா அளவில் ‘சென் சேஷனல்’ நடிகையாக மாறி போயிருக்கும் ஸ்ரீலீலா, தற்போது பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்கு ரூ.3.25 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த நிலையில் ஸ்ரீலீலா தனது சம்பளத்தை ரூ.4.5 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். புதிய படம் ஒன்றில் அவர் இந்த தொகையைச் சம்பளமாக கேட்டுள்ளாராம்.

தற்போது தெலுங்கில் 3 படங்களும், இந்தி மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படமும் ஸ்ரீலீலா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.