Take a fresh look at your lifestyle.

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

43

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் ‘பராசக்தி’. கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய இந்தப் படம் தமிழ்த் திரை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

அதே பெயரில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குநர் சுதா கொங்கரா.

இவர், ‘துரோகி’, ‘இறுதிச் சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்களை இயக்கியவர்.

சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுதா கொங்கரா கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தைக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

தலைப்பு சர்ச்சை தவிர, இந்தப் படத்துக்கு சில சிறப்புகளும் உண்டு.

முதல் முறையாக இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம். சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமும் கூட.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இப்படம், 2026 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.