பிரபல பின்னணிப் பாடகரான ஹரிசரண் தன் 17-வது வயதில் 2004-ம் ஆண்டு வெளிவந்த ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தில் இடம்பெற்ற “உனக்கென இருப்பேன்…” என்ற பாடலைp பாடி இருந்தார். அந்தப் பாடல் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
‘பையா’ படத்தில் அவர் பாடிய “துளி துளி மழையால் வந்தாளே..” பாடல் பட்டித்தொட்டி எங்கும் கலக்கியது.
தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான், டி.இமான், தேவிஸ்ரீ பிரசாத், விஷால் சந்திரசேகர் என பலரது இசையமைப்பில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
இவரை அறிமுகம் செய்தவர் ஜோஷ்வா ஸ்ரீதர்.
அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமானவர் ஹரிசரண்.
இதுவரை சுமார் 2000 பாடல்களைப் பாடியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படம் காதல், பிப்ரவரி 14, பாரிஜாதம், பட்டியல், உன்னாலே உன்னாலே, கலாபக் காதலன், தீபாவளி, கண்ணாமூச்சி ஏனடா, வேல், தொட்டால் பூமலரும், சென்னை 600028, கல்லூரி, வாழ்த்துக்கள் முதலியன.
தனது இனிமையான குரலின் மூலம் பல பாடல்களைப் பாடி இசை ரசிகர்களைக் கவர்ந்த பாடகர் ஹரிச்சரணிற்கு ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.