Take a fresh look at your lifestyle.

விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசை!

நடிகர் சிவராஜ் குமார்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே இதுவரை முடிந்துள்ளது.

அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவர்கள் இருவரது கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களைக் கொடுத்துள்ளனர். இந்தப் படங்கள் அனைத்தும் விமர்சனங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கடைசிப் படம் தான் விஸ்வாசம். 2019-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகளவில் ரூ. 187 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இந்த நிலையில், கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் பேட்டி ஒன்றில், விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க ஆசை என கூறியுள்ளார். இது பழைய தகவலாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.