Take a fresh look at your lifestyle.

‘இசைபட வாழ்தலே’ இன்றைய தேவை!

அண்மையில் ‘சப்தம்’ படம் பார்க்க நேர்ந்தது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கிய படம். ஆதி, லஷ்மி மேனன், லைலா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஒரு மருத்துவக் கல்லூரி. அங்கு அடுத்தடுத்து சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பேய், பிசாசு இப்படி ஏதாவது அமானுஷ்ய காரணங்கள் இருக்கலாமா? நிர்வாகம் யோசிக்கிறது.

பேரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர் ரூபனை (ஆதி) அழைக்கிறார்கள். மாணவர்கள் ஏன் இறந்தார்கள்? ஆதி கண்டுபிடித்த மர்மம் என்ன? என்பதுதான் சப்தம்.

ஒரு கதையென்றால் நாயகன், வில்லன் என்ற பைனரி இருக்கும். ‘இசை vs சப்தம்’ என்கிற பைனரியில் கொஞ்சம் மியூஸிக் தெரிஃபி, பிளாக் மேஜிக் எல்லாம் தூவி எழுதப்பட்டிருக்கிற கதை சப்தம்.

இந்த உலகத்தை இசை ஆள வேண்டும். ஆனால் சப்தம் ஆளுகிறது.

nuisance (தொந்தரவு), nausea (குமட்டல்) போன்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்ததுதான் Noise.
21 ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்பம் இரைச்சலை வளர்த்திருக்கிறது.

போர் விமானங்கள், வெடி குண்டுகள், ஜெட் என்ஜின்கள், கார்கள், மோட்டார் பைக்குகள், ஸ்டிரியோக்கள் என எங்கும் இரைச்சல் மயம். மனிதர்களை இந்த இரைச்சல் பைத்தியக்காரர்களாக மாற்றிவரும் சூழல்.

சப்தம் என்பது என்ன?

இசைக் கலைஞர் அலெக்ஸ் ராஸிடம் (Alex ross) கேட்டார்கள். Sometimes we embrace it, sometimes we hate it—and everything depends on who is making.

இளையராஜா எழுப்புகிற சப்தம் இசை. பாலஸ்தீனத்தில் கேட்கிற சப்தம் நரகத்தின் ஓசை. பேரடைஸ் லாஸ்ட்டில் ‘கடவுளின் குரல் எப்படி இருந்தது?’ மில்டன் சொல்கிறார், ‘like a noise of many waters.’

இந்தப் படத்தில் சிம்ரன்தான் ‘இசை’. லைலா ‘சப்தம்’. இரண்டுமே உருவகங்கள்.

இந்த உலகிற்கு எது தேவை?

திருவள்ளுவர் சொல்வதுதான். ‘இசை பட வாழ்தல்’.

தமிழில் இசைக்கு, இயைதல், புகழ் என இரண்டு பொருட்கள் உண்டு.

மற்றவர்களோடு இயைந்து வாழ்தல் என்பது அவர்களுக்கு உதவியாக வாழ்தல், பயனுடைய வகையில் வாழ்தல் ஆகும். அப்படி இயைந்து போவதுதான் இசை. இத்தகு பயனுடைய வாழ்வு வாழ்ந்தால் புகழடையலாம்.

சில வேளை அதிகாரத்தை எதிர்க்க முழங்குகிறோம். அது சப்தமாகாது. அதுவும் இசைதான். ராப், ஹிப் ஹாப் போன்றவற்றை அதிகாரம் ‘கருப்பு சப்தம்’ என்றது.

அறிவழகனின் இந்த ‘சப்தமும்’ அத்தகையதுதான். ஹாரர் படம் போலத் தோன்றும். ஆனாலும் noise pollution ஐ, பிளாக் மேஜிக்கோடு இணைத்துச் சப்தம்.

– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு