Take a fresh look at your lifestyle.

அந்தாகா கஸம், அபுல்கா ஹூகும்; திறந்திடு சீஸேம்!

76
மாடர்ன் தியேட்டர்ஸ் கேவா கலரில் எடுத்த ‘அலிபாபாவும், 40 திருடர்களும்’ படத்தில் நடித்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், பானுமதியும். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்திருப்பார்.
 
படத்தை இயக்கியிருப்பவர் டி.ஆர்.சுந்தரம். இசை தட்சிணாமூர்த்தி. படம் வெளியான ஆண்டு -1955.
 
“மாசில்லா உண்மைக்காதலே” என்று எம்.ஜி.ஆருக்காக ஏ.எம்.ராஜா பாட, “அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்” என்று பி.பானுமதி பாடும் பாடல்களும் இடம் பெற்ற இந்தப் படம் செம ஹிட்.
 
இதே படம் இதற்கு முன்னாலும் இரண்டு முறை வெளிவந்திருக்கிறது தெரியுமா?
 
முதலில் கே.பி.கேசவன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த அலிபாபாவில் குகையைத் திறக்க “எள்ளே கதவைத் திற; எள்ளே கதவை மூடு” என்கிற மந்திரச் சொல்லைச் சொல்லக் குகைக் கதவு திறக்கும்.
 
நாற்பதுகளில் வெளிவந்த ‘அலிபாபா’படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கே.பி. காமாட்சி சுந்தரம் போன்றவர்கள் நடித்தார்கள்.
 
இந்தப் படத்தில் குகைக் கதவைத் திறக்க  “சைத்தான் கா மஹ்மல்கா தார்வாஜா கோலோ” என்று பேச குகை திறக்கும்.
 
இதற்கெல்லாம் மூலமாக வந்த ‘அலிபாபா’ ஆங்கிலப் படத்தில் “ஓப்பன் சீஷேம்.. ஷட் சீஷேம்” என்று பேசிய பிறகு குகைக்கதவு திறக்கும்.
 
இப்படி எல்லா ‘அலிபாபா’ படங்களுமே குகையையும் திறந்திருக்கின்றன. தயாரித்தவர்களின் கல்லாப்பெட்டிகளையும் நிரப்பித் திறக்க வைத்திருக்கின்றன.