Take a fresh look at your lifestyle.

குற்ற வழக்குகளால் பட வாய்ப்புகளை இழந்த மைக்கேல் ஜாக்சன்!

கொலம்பியா நிறுவனம் மைக்கேல் ஜாக்சனை வைத்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டது. ‘ஜாக் அன் தி பீன்ஸ் டாக்’ என்ற தலைப்பில் தயாரிக்கவிருந்த படத்திற்காக அவருக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட தொகை 1.4. மில்லியன் டாலர்.

இதற்கடுத்து உலகப் புகழ்பெற்ற ‘பினாக்கியோ’ கதையிலும் இவரை மையமாகவும் மற்ற கேரக்டர்களை கார்ட்டூன்களாகவும் சித்திரித்து பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக்கத் திட்டமிட்டனர்.

இடையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டதாம்.

ஏறக்குறைய ஆறு படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பை இழந்திருக்கிறார் மைக்கேல் ஜாக்சன். வழக்குகளாலும் இவருக்குக் குறைந்து வரும் செல்வாக்கினாலும் படங்கள் தோல்வியைத் தழுவலாமென்ற பயம் தயாரிப்பளார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அ. குமார்.

-1994-ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த புதிய பார்வை இதழிலிருந்து…