Take a fresh look at your lifestyle.

விமர்சகர்களுக்குத்தான் கலை என்பது புனிதவெளி, குழந்தைகளுக்கு அல்ல!

உலகின் மிக உயர்ந்த கதை இயக்குநர்கள் இருவரின் உளமார்ந்த உரையாடல்…
 
அகிரா குரசோவா:
 
உங்களது படங்களின் எளிமையும் யதார்த்தமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, நீங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். அது எப்படி உங்களால் முடிகிறது?
 
குழந்தைகள் உங்கள் படங்களில் மிக இயல்பாக வீட்டில் இருப்பது போல இருக்கிறார்கள். என் படங்களில் அப்படியிருப்பதில்லை. ஒளிந்துகொண்டு யாரோ தம்மை பார்ப்பதைப் போல உணர்கிறார்கள். இந்த இயல்பான நடிப்பை எப்படிச் சாத்தியமாக்குகிறீர்கள்?
 
அபாஸ் கிராஸ்தமி:
 
அது உங்களைப் போன்ற திரை ஆளுமைகளிடமிருந்து கற்றுக்கொண்டதே. எந்த விசேஷ முறையையும் பயன்படுத்தி நாங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதில்லை. அவர்கள் இயல்பிலே இருக்க அனுமதிக்கிறோம். அதேநேரம் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதைப் புரிய வைக்கிறேன். குழந்தைகள் நடிக்கையில் இயல்பான, யதார்த்தமான விஷயங்கள் நிகழக்கூடும். நடிப்பு புனிதப்படுத்தப்பட வேண்டியதில்லை.
 
உங்கள் படத்தில் நடிக்கும் குழந்தைகள், நீங்கள் ‘குரசோவா’ என்பதை உணர்ந்திருப்பது தான் அவர்களின் அச்சத்திற்கு முதல் காரணம். நான் குழந்தைகளோடு படப்பிடிப்பிற்கு முன்பாகப் பழகுகிறேன். ஒன்றாக விளையாடுகிறேன். அவர்கள் என்னைக் கண்டு ஒருபோதும் பயம் கொள்வதில்லை. விமர்சகர்களுக்குத்தான் கலை என்பது புனிதவெளி, குழந்தைகளுக்கு அல்ல.
 
**
 
எல்லா தேசத்தின் பெருங்கலைஞர்களும் குழந்தைகளின் உளநிலைகளைப்பற்றி உரையாடுகிறார்கள், விவாதிக்கிறார்கள், அதை கலைவடிவமாக மாற்றி மெல்லமெல்ல சமூகத்தில் அதனை தங்களுடைய கருத்துவடிவமாக நிலைநிறுத்துகிறார்கள் என்பது நிதர்சனம்.
 
  • நன்றி – முகநூல் பதிவு