விக்னேஷ் நடிப்பில், ஆக்ஷன், த்ரில்லர் கலந்த படமாக உருவாகி இருக்கும் ‘ரெட் பிளவர்’ படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்குகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி ‘ரெட் பிளவர்’ படத்தின் புதிய பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இந்த ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் அவரது கதாபாத்திர வடிவமைப்பும், அவரது தோற்றமும், நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும். அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
காலத்தால் அழியாத காதலை சமகாலக் கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குநர். இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம் என்கிறார் இயக்குநர்.
மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம். கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசை அமைக்க, படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.
இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களைப் பற்றி இப்படம் பேசும் என்று இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்தார்.