Take a fresh look at your lifestyle.

முதல் படம் தோல்வி: மனம் தளராத பீம்சிங்!

பேசும் படம் :

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜிக்கு முதல் படமாக அமைந்தது.

‘பராசக்தி’யில் உதவி இயக்குநராக பணியாற்றிய பீம்சிங், தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1952 ஆம் ஆண்டில் ‘பராசக்தி’ ரிலீஸ்ஆனது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயக்குநராக அறிமுகமானார் பீம்சிங். அவர் அறிமுகமான படம், ‘அம்மையப்பன்’.

1954 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர், கலைஞர் கருணாநிதி.

எஸ்.எஸ்.ஆர். ஹீரோவாக நடித்தார். ஜி. சகுந்தலா, எஸ்.வரலட்சுமி, வி. நாராயணசுவாமி, டி. பாலசுப்பிரமணியம், வி.கே. ராமசாமி, எம்.ஆர். சாமிநாதன் உட்பட பலர் நடித்தனர்.

விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் டி.ஆர். பாப்பா. பாடல்கள், மு. கருணாநிதி, கவிஞர் சுரதா, எம்.கே.ஆத்மநாதன், முத்துக்கூத்தன்.

ஆனாலும் முதல் படம் தோல்வி பற்றி கலங்காத பீம்சிங், தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தார்.

குறிப்பு: படப்பிடிப்புத் தளத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞருடன் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ், வீ.கே.ராமசாமி, நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் பீம்சிங் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

– நன்றி : முகநூல் பதிவு