Take a fresh look at your lifestyle.

நண்பனின் மகளை மனதார வாழ்த்தும் நம்பியார்!

பார்த்து நெகிழ்ந்த சிவாஜி

155

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது.

பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா மங்கேஷ்கர் சகோதரிகள் போன்ற வி.ஐ.பி-களும் வந்திருந்த திருமண வரவேற்பின்போது இசைக்கச்சேரி செய்தவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், முத்துராமன், சந்திரபாபு, நாகேஷ் இப்படித் திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை.

அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

பி.கு –  நடிகர் திலகம் மகள் சாந்தி திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் நம்பியார். நம்பியார் வாழ்த்துவதை அமர்ந்தபடி ரசித்து ஆனந்தப்படும் தந்தை சிவாஜி கணேசன்.